பாரதிய ஜனதா கட்சி திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் “நம்மஊரு மோடி பொங்கல்” என்ற 1008 பொங்கல் பானையில் பொங்கல் வைத்து கொண்டாடும் பொங்கல்விழா திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நடைபெறுகிறது.
அதற்கான விழா மேடை அமைக்கும் பணி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரிசையாக பொங்கல் பானை வைத்து பொங்கலிட ஏதுவாக இரும்பு தடுப்புகளுக்கு மத்தியில் கயிறு கட்டப்பட்டும், பாஜக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஏனைய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக மேடையின் வலதுபுறத்தில் சிகப்பு கம்பளத்துடன் கூடிய மேடை அமைக்கப்பட்டுள்ளது.
மேடையில் இருந்து நடந்துவந்து பொதுமக்களை சந்தித்து கையசைக்கும் வகையில், மேடையில் இருந்து 50 அடி அகலம் 30அடி நீளத்திற்க்கு தொலைவிற்கு ராம்ப் அமைக்கப்பட்டுள்ளது.
20 பாக்ஸ் 1007 பானைகளில் பொங்கல் வைக்க உள்ளனர்.ஒரு பானையில் மட்டும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பொங்கல் வைக்கிறார்.
இந்நிகழ்வில் பேசிய முன்னாள் ஆளுநர் தமிழிசை….
மரியாதைக்குரிய அமித்ஷா நம்மோடு சேர்ந்து பொங்கல் கொண்டாட வருகிறார்.
தமிழ் பொங்கலை திராவிட பொங்கலாக மாற்றிவிட்டார் முதல்வர். தமிழ் பொங்கல் தேசிய பொங்கல் ஆனால் தமிழ் என்ற வார்த்தையை விடுத்து திராவிடம் திராவிடம் என்று சொல்லி உங்களையும் திராவிட பொங்கலாக மாற்றி விட்டார்கள். ஆனால் உண்மையிலேயே தமிழுக்கு பெருமை சேர்க்கின்ற ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது பாரதிய ஜனதா கட்சி தான்.
நீங்கள் சூரியனை சின்னமாக மட்டும் தான் வைத்திருக்கிறீர்கள் ஆனால் அந்த சூரியனையே சூரிய சக்தியாக மாற்றியது நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி.
கரும்புக்கு அதிகமான விலை கொடுத்திருப்பதும் நமது மரியாதைக்குரிய பாரத பிரதமர் அவர்கள்தான் கரும்பு சக்கையிலிருந்து சர்க்கரை மட்டுமல்லாமல் எத்தனால் போன்றவரை எடுத்து சக்திக்கு ஏற்படுத்துவதற்கு உதவி செய்வதும் அந்த வழிமுறையை பாரத தேசத்தில் அதிகமாக பயன்படுத்திக் கொண்டிருப்பதும் நமது பாரத பிரதமர் அவர்கள் தான்.
இயற்கையே சக்தியாக மாற்றிக் கொண்டிருக்கும் பொழுது பொங்கல் என்பது ஒரு சக்தியை தரும் விழா அதே போல் விவசாயிகளுக்கு இன்றைய தினம் கூட விவசாயிகள் மாநாடு நமது பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நடத்தப்படுகிறது. விவசாயிகளுக்கு 6000 ரூபாய் உதவித்தொகை கொடுத்து , ஒரு விவசாயியாக பச்சை துண்டு போடும் முழு உரிமை படைத்தவர் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி. அவரின் வழிவந்த மரியாதைக்குரிய அமைச்சர் அமித் ஷா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது நமக்கு எல்லாம் மிக்க மகிழ்ச்சி.
வட இந்தியாவிலிருந்து அமித்ஷா வந்து நம்மோடு பொங்கல் கொண்டாடி வட இந்தியாவ
வை தென் இந்தியாவுடன் இணைத்துக் கொண்டிருக்கிறார் ஆனால் தமிழக கட்சிகள் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் வட இந்தியாவையும் தென்னிந்தியாவையும் பிரித்துக் கொண்டிருக்கிறார்கள். சகோதரத்துவத்தை கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் இன்று மூவாயிரம் ரூபாய் கொடுக்கிறேன் என்று சொல்கிறார்கள் அதை வங்கிக் கணக்கில் செலுத்தி இருக்கலாம். நேரடியாக வந்து நின்று தான் எல்லாவற்றையும் வாங்க வேண்டும் என்று பெண்களுக்கு ஒரு சிரமத்தை கொடுக்கிறார்கள்
எதிர்க்கட்சியாக இருந்த பொழுது ஐயாயிரம் கொடுங்கள் என்று சொன்னவர்கள் இப்பொழுது 3000 தான் கொடுக்கிறார்கள் ஆனால் எல்லாமே தேர்தலுக்காக நீங்கள் செய்து கொண்டு உள்ளீர்கள்.
இந்த 2026 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி கொண்டாடும் இந்த பொங்கல் விழா 2026 தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றிகள் தரும் விழாவாகவும் தாமரையை வளர செய்யும் பொங்கல் ஆகும் அமைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்து வந்து விடைபெறுகிறேன் என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments