திருச்சியில் இன்று நடைபெற்ற மோடிபொங்கல் விழாவில் 1008 பெண்கள் பொங்கல் வைத்து கொண்டாடினார்கள். இதையொட்டி காலை 8 மணி முதல் பெண்கள் விழா மைதானத்திற்கு வந்து விட்டனர். பொங்கல் வைத்த உடன் புகை நிறைய வந்தது. இதனால் விழா நடந்த மைதானம் முழுவதும் புகை மண்டலாக காணப்பட்டது.
நிறைய பேருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சௌந்தரராஜன் மேடையில் பேச தொடங்கினார். அப்பொழுது பொங்கல் வைத்த இடத்தில் ஒரு பெண் திடிரென்று மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த காவல்துறையினர் அந்த பெண்ணை தூக்கி கொண்டு மேடை அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாம் இடத்திற்கு அழைத்து வந்து முதலுதவி செய்தனர்.
அப்பொழுது மேடையில் பேசிக் கொண்டிருந்த தமிழசை சௌந்தராஜன் பேச்சை நிறுத்தி விட்டு மருத்துவ முகாம் இடத்திற்கு ஒடி வந்து மயங்கி கிடந்த பெண்ணுக்கு மருத்துவ குழுவுடன் சேர்ந்து சிகிச்சை அளித்தார். பிறகு மேல் சிகிச்சைக்காக அந்த பெண் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மயங்கிய பெண் குறித்து விசாரித்த போது அவர் பெயர் நாகரத்தினம், வயலூர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் சிறிது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments