முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர் விஜயபாஸ்கர் தினந்தோறும் சைக்கிள் அல்லது வாக்கிங் செய்து மக்களை தினம்தோறும் சந்திப்பது வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அதன்படி இன்றைய தினம் இரவு முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால் கார் மூலம் விராலிமலை சென்ற அவர் விராலிமலை முருகன் கோயிலை சுற்றியுள்ள மலைப்பாதையில் அதிமுக நிர்வாகிகளுடன் வாக்கிங் சென்றார் அப்போது பல்வேறு பொதுமக்களை சந்தித்தார் பிறகு ஒரு டீ கடைக்கு சென்று அவர் எனக்கு டீ வேண்டாம் வடை சூடாக போட்டு கொடுங்கள் என்று கேட்டார் அப்போது அந்த கடைக்காரர் நீங்களே வடை போடலாம் வாங்க அண்ணா என்று அழைத்தார் உடனே சென்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வந்து அடுப்பில் வெந்து கொண்டிருந்த வடையை பதம் பார்த்து வடை வெந்த பிறகு அதனை எடுத்து நிர்வாகிகளுக்கு வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்
தன்னுடன் வந்த நிர்வாகிகளுக்கு வடை சுட்டுக் கொடுத்த முன்னாள் அமைச்சரின் இந்த செயலை கண்ட பொதுமக்கள் வியப்பாக பார்த்து வாழ்த்து தெரிவித்து சென்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments