தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி அவர்களின் 98 ஆவது பிறந்த நாள் விழாவை திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு தொகுதி கலைஞர்நகர் , பாலக்கரை ,மலைக்கோட்டை பகுதிகளில் ஏழை எளியவர்களுக்கு உணவு மற்றும் கொரோனாவல் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழா கிழக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஏற்பாட்டில் நடைபெற்றது.

 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு உணவுப் பொருட்களையும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.
   


இந்நிகழ்வில் கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பகுதி கழக செயலாளர்கள் மதிவாணன், ராஜசேகர், பாலமுருகன், அரங்கநாதன், செந்தில், மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் பொதுமக்கள் என பெரும் திரளாக கலந்துகொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC




            
            
            
            
            
            
            
            
            
            


Comments