நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
திருச்சி திருவெறும்பூரில் புதிய பேருந்து நிலையம் அமைத்து தரக்கோரி திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் அப்போது மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் வாயிலாக தமிழக நகராட்சி நிர்வாக துறையிடம் திருவெறும்பூர் பகுதியில் புதிய விரிவாக்க பேருந்து நிலையம் அமைத்து தரக்கோரி தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் எடுத்துரைத்தார்.
இதனை தொடர்ந்து ஒப்புதல் வழங்கி ஆறாவது மாநில ஆணையத்தின் கீழ்
2025 – 26 ஆம் நிதி ஆண்டின் கீழ் 1 ஏக்கர் பரப்பளவில் ரூ 6 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கபடும் என அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணி தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழாவானது இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேருவிடம் கேள்வி எழுப்பிய போது, மாநில அரசை ஒடுக்க அமலாக்கத்துறை போல், சென்சார் போர்டை மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக முதல்வர் கூறி இருப்பதை நானும் இருக்கிறேன், பலவிதத்தில் கட்டுப்படுத்த பார்க்கிறார்கள்.
என்னிடம் எதையாவது கேட்டு பதிலை பெற்று நாள் முழுவதும் ஓட்ட பார்க்கிறீர்களா என நகைச்சுவையாக பதில் அளித்து சென்றார்.
இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments