நாலே நாளுதாங்கோ நோட்டை மாத்துங்கோ !

நாலே நாளுதாங்கோ நோட்டை மாத்துங்கோ !

இந்திய திருநாட்டில் புழக்கத்தில் இருந்து 2000 ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன என்று ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் 19ம் தேதி அறிவித்தது 2023 செப்டம்பர் 30ம் தேதி வரை, வங்கிக்கணக்குகளில் 2000 நோட்டுக்களை மக்கள் டெபாசிட் செய்யலாம் அல்லது வங்கிகளில் கொடுத்து வேறு நோட்டுக்களாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மக்கள் டெபாசிட் செய்தும், வேறு நோட்டுக்களாக மாற்றியும் வந்தனர். மே மாதம் 19ம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் மொத்தம் ரூபாய் 3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய்  நோட்டுக்கள் இருந்தன ஆகஸ்ட் 31ம் தேதி வரை ரூபாய் 332 லட்சம் கோடி மதிப்பிலான 93 சதவிகித நோட்டுக்கள் திரும்பப்பெறப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 31ம் தேதி வங்கி வேலை நேரம் முடிவடைந்தபோது. நாடு முழுவதும் 24 ஆயிரம் கோடி மதிப்பிலான 2000 நோட் டுக்கள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன.

இந்நிலையில், 2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ள ரிசர்வ் வங்கி அளித்த அவகாசம் நிறைவடைய இன்னும் நாட்களே இருந்த நிலையில், மிலாடி நபி பண்டிகைக்காக செப்டம்பர் 28ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது ஆகவே இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே மீதம் உள்ளன. இந்த நான்கு நாட்கள் மட்டுமே வங்கிகளில் 2000 நோட்டுக்களை டெபாசிட் செய்ய அல்லது மாற்றிக் கொள்ள முடியும்.

2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து வாபஸ் பெறப்பட்டாலும்,  தொடர்ந்து செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆனால், வர்த்தகப் பணப்பரிமாற்றங்களில் 2000 நோட்டு ஏற்றுக்கொள்ளப்படாது செப்டம்பர் 30ம் தேதிக்கு பின்னர் ரிசர்வ் வங்கியில் 2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் எனினும், அறிவிக்கப்பட்ட அவகாசத்துக்குள் ஏன் நோட்டுக் களை மாற்றவில்லை என நோட்டு வைத்திருப்பவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision