தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு மாணாக்கர்களின் நலனை கருத்திற்கொண்டு. எண்ணற்ற பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் சிறந்த முறையில் கல்வி பயிலும் வகையில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி அவர்களது மேல்நிலைக் கல்வியை உறுதி செய்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 8,213 மாணவர்களுக்கும், 12,186 மாணவியர்களுக்கும் சேர்த்து 2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கு மொத்தம் 20,399 மிதிவண்டிகள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இதுவரை 50 பள்ளிகளைச் சேர்ந்த 2016 மாணர்களுக்கும், 3669 மாணவிகளுக்கும் ஆக மொத்தம் 5685 மாணவ. மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இன்று (05.08.2023) மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி பகுதிகளில் உள்ள 36 பள்ளிகனைச் சேர்ந்த 1272 மாணவர்களுக்கும், 1250 மாணவிகளுக்கும் என மொத்தம் 2522 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிடும் வகையில் மண்ணச்சறல்லூர் வட்டம், புறத்தாக்குடி தூயசவேரியார் மேல்நிலைப்பள்ளி, துறையூர் வட்டம், கண்ணனூர் அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளி, முசிறி நகராட்சிக்குட்பட்ட முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற விழா நிகழ்வில் விலையில்லா மிதிவண்டிகளை மாணவ மாணவிகளுக்குமாவட்டஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார்,வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர்கள் தியாகராஜன், செ.ஸ்டாலின் குமார். ஊராட்சித்தலைவர்த.ராஜேந்திரன், இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்ரமணியன். முதன்மை கல்வி அலுவரை சிவக்குமார், முசிறி நகர்மன்றத் தலைவர் கலைச்செல்வீசிவக்குமார், முசிறி ஒன்றியக்குழுத் தலைவர் மாலாராமச்சந்திரன், முசிறி நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி. கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரிய பெருமக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநீதிகள், அரசு அலுவலர்கள் உ ள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments