திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2023-ஆம் ஆண்டு திட்ட நிரலின்படி 6553 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 3587 பட்டதாரி ஆசிரியர்கள் பணிக் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.
இதனைத்தொடர்ந்து, ஆசிரியர் தகுதித் தேர்வுக்களுக்கான (TET) இலவச பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் (21.08.2023) திங்கட்கிழமை அன்று காலை 9:30 மணி அளவில் துவங்கப்படவுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கு (TET) தயாராகும் போட்டித்தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையுமாறும், இதுதொடர்பான விவரங்களுக்கு 0431-2413510, 9499055901 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார், தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments