திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் திருச்சி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை (IOL) லென்ஸ் இலவசமாக பொருத்து முகாம் நடைபெற்றது. திருச்சி மணிகண்டம் ஒன்றியம் பாகனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன.

இம்முகாமில், கண்களில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் இலவசமாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் இலவசமாக ரத்தக்கொதிப்பு பரிசோதனை மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. கண்புரை உள்ள நோயாளிகளை தேர்வு செய்து இருங்கலூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கண் புரை நீக்கம் செய்து (IOL) லென்ஸ் இலவசமாக பொருத்தப்பட உள்ளது.


சிகிச்சை பெறுபவர்களுக்கு போக்குவரத்து செலவு, உணவு தங்குமிடம் அனைத்தும் முற்றிலும் இலவசம். இந்த இலவச கண் பரிசோதனை முகாமில் பாகனூரில் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments