ஹோப் பவுண்டேஷன், திருச்சி மாவட்ட மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு இலவச திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது. உய்யக் குண்டான் திருமலையில் அமைந்துள்ள எங்கள் பிரத்யேக மையத்தில் சுமார் 700க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கி இலவசமாக வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துவருகிறோம்.
இதன் அடுத்த கட்ட முயற்சியாக தில்லை நகர் லட்சுமி காம்ப்ளக்ஸில் மற்றுமொரு அதிநவீன வசதிகள் கொண்ட நர்சிங் லேப் ஏற்படுத்தப்பட்டு GDA என்று சொல்லப்படும் நர்சிங் அசிஸ்டன்ட் பயிற்சியை இலவசமாக வழங்க தொடங்க உள்ளோம். இந்த பயிற்சியோடு சேர்ந்து வேலைவாய்ப்பையும் தர தயாராக இருக்கிறோம்.
இந்த பயிற்சி முற்றிலும் இலவசம் என்பதால் பிற்படுத்தப்பட்டோர், பணம் செலுத்தி படிக்க இயலாதோர், வேலை நாடுனர்கள், நர்சிங் மீது ஆர்வம் கொண்டவர்கள், இதில் சேர்ந்து பயனடையலாம். இந்த பயிற்சியில் இலவசமாக சேர்வதற்கு கீழே கொடுக்கப்பட்ட QR Code-ஐ ஸ்கேன் செய்து அதிலுள்ள விண்ணப்பத்தை நிரப்பி பதிவிடவும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments