Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

குருப்-IV தேர்வுக்கான கட்டணமில்லா மாதிரி தேர்வுகள்- தேதிகள் வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர், நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் 3935 கிராம காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு குருப்-IV தேர்வுக்கான அறிவிப்பாணை 25.04.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வானது 12.07.2025 அன்று நடைபெற உள்ளது.

 இத்தேர்வினை போட்டித்தேர்வர்கள் சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில் குருப்-IV தேர்வுக்கான கட்டணமில்லா முழு மாதிரி தேர்வுகள் (FULL MOCK TEST )மாநில மற்றும் மாவட்ட அளவில் 21.06.2025, 25.06.2025, 28.06.2025, 02.07.2025 மற்றும் 05.07.2025 ஆகிய தேதிகளில் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முற்பகல் 10.00 மணி அளவில் நடைபெறவுள்ளன.

இம்மாதிரித் தேர்வுகள் டி.என்.பி.எஸ்.சி ஆல் நடத்தப்படும் தேர்வு போன்று 200 வினாக்கள் கொண்டதாகவும் OMR தாளினைக் கொண்டும் நடத்தப்படும்.மேற்கண்ட முழு மாதிரித் தேர்வுகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் குருப் 4 தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகலினை 9499055902 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து போட்டித்தேர்வர்களும் இம்மாதிரித் தேர்வுகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், இதுதொடர்பான விவரங்களுக்கு 0431-2413510 என்ற திருச்சிராப்பள்ளி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் அவர்கள்   இத்தகவலை தெரிவித்துள்ளார் 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *