கேர் பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று நடத்தப்பட்டது. கேர் பொறியியல் கல்லூரியின் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் ஆய்வகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இம்முயற்சியானது நாட்டு நலப்பணி திட்டம் (என்எஸ்எஸ்) மற்றும் யூத் ரெட் கிராஸ் (ஒய்ஆர்சி) பிரிவுகளின் கூட்டு முயற்சியாகும். இது திருச்சி மாக்சிவிஷன் கண் மருத்துவமனைகளுடன் இணைந்து நடைபெற்றது. டீன் Dr. S. சாந்தி கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தார். முகாமில் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விரிவான கண் பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த 267 மாணவர்களும், 56 பணியாளர்களும் இலவச கண் சிகிச்சைச் சேவையில் பயன்பெறும் வாய்ப்பைப் பயன்படுத்தினர். இத்தகைய முயற்சிகளின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்நிகழ்வு கல்லூரி சமூகத்தினரின் பெரும் பாராட்டுக்களைப் பெற்றது.
மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை உதவிப் பேராசிரியரும், என்எஸ்எஸ் திட்ட அலுவலருமான ஆர்.சரவணன் நன்றியுரை ஆற்றி, முகாமின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் நன்றி கூறினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments