இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் இலவச சுய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் துரித உணவுகள் தயாரிப்பது குறித்து 90 சதவீத செய்முறை பயிற்சியுடன், 10 நாட்கள் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் கிராமப்புற வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும், இலவசமாக முழு நேரப் பயிற்சி வங்கிக்கடன் பெற முழு ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. கல்வித் தகுதி குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 வயதிற்கு மேல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள வருபவர்கள் தேசிய வேலை உறுதி திட்ட அட்டை அல்லது ரேஷன் கார்டு ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், ஜாதி சான்றிதழ் கல்வி சான்றிதழ் மாற்றுச் சான்றிதழ் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 3 கொண்டு வர வேண்டும்.
இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் நேரில் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் தொலைபேசி எண் 0431-2412825 / 9994737185 / 7397512544
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn




Comments