திருச்சியில் மாணவர்களுக்கு விலையில்லா தரவு அட்டை (Free 4G Data Sim Card )வழங்கிய நிகழ்வு

திருச்சியில்  மாணவர்களுக்கு விலையில்லா தரவு அட்டை (Free 4G Data Sim Card )வழங்கிய நிகழ்வு

தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களில் ஒன்றாக உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், ஆன்லைன் வகுப்புகள் மூலம் அறிவுத்திறனை மேம்படுத்த ஏதுவாகவும், தினமும் 2 Data வீதம் நான்கு மாதங்களுக்கு பயன்பெறும் வகையில் விலையில்லா தரவு அட்டை (Free 4G Data Sim Card ) வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல், பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் தகுதியுடையவராகிறார்கள்.

இத்திட்டத்தின் மூலம் திருச்சி மாவட்டத்தில் உள்ள 1 அரசு பொறியியற் கல்லூரி, 1 பல்கலைக் கழக உறுப்பு கல்லூரி, 2 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 2 அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள் உட்பட மொத்தம் 67 பொறியியற் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த 18281  தொழில்நுட்பக் கல்வி மாணவ, மாணவியர்கள் பயன்பெற உள்ளனர். மேலும், திருச்சி மாவட்டதைச் சார்ந்த 5 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 8 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உட்பட 28 கலை அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த 32512 மாணவ, மாணவியர்கள் பயன்பெற உள்ளனர்.  இதற்காக 50793 விலையில்லா தரவு அட்டைகள் மாணவ, மாணவியர்களுக்கு ஏதுவாக தயார் நிலையில் உள்ளன. 

இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் 2GB DATA வீதம் நான்கு மாதங்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா தரவு அட்டை (Free 4G Data Sim Card ) சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு வழங்கினார், அரசினர் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர்.வி.எம்.சாந்தி, அரசினர் பலவகை தொழிற்நுட்ப கல்லூரி முதல்வர் வ.தேன்மொழி, அரசினர் பொறியியல் கல்லூரி துறைத்தலைவர் அறிவியல் கல்லூரி ப.வனிதா முத்து மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH