திருச்சி மாநகராட்சி 23வது வார்டில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள மழலையர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி மற்றும் அறிவியல் நிகழ்ச்சிகள் மூலம் அதிகளவில் பயன் பெறும் வகையில், மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் இலவச ஸ்மார்ட் கிளாஸ் தொலைக்காட்சி பெட்டியினை மாநகர மாவட்ட தலைவர், கவுன்சிலர் எல். ரெக்ஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் விச்சு லெனின் பிரசாத் ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்வு தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் செயலாளர் மோதி பெரியசாமி அவர்கள் தலைமையிலும் , தில்லைநகர் கோட்ட பொறுப்பாளர் ராகவேந்திரா அவர்கள் முன்னிலையிலும் மாவட்ட பொருளாளர் ஜி.முரளி அவர்கள் சிறப்பு அழைப்பாளராகவும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் வார்டு தலைவர் செல்வகுமார், ராம்குமார் பிரசன்னா, தமிழரசி, வளன் ரோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments