கரூர் மாவட்ட இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையம், புழுதேரியில் ஒரு நாள் இலவச மீன் வளர்ப்பு சார்ந்த ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த பயிற்சியானது எதிர்வரும் 11.11.2022 வெள்ளி கிழமை அன்று காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் கட்லா, ரோகு. மிர்கால், சாதா கெண்டை, புல் கெண்டை மற்றும் கிப்ட் திலேப்பியா ஆகிய பல்வேறு ரக மீன்களை ஒருங்கிணைந்த பண்ணையம் முறையில் வளர்க்கும் தொழில்நுட்பங்கள், தீவன மேலாண்மை, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல், சந்தைப்படுத்துதல், லாபகரமான முறையில் மீன் வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படும். எனவே ஆர்வமுள்ள ஊரக இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இப்பயிற்சிக்கு முன் பதிவு அவசியம்.மேலும் விபரங்கள் அறிய கைபேசி எண் 6381150356 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..
https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO






Comments