Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயண அட்டை

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக மாற்றுத்திறனாளிகள் மாவட்டம் முழுவதும் சென்று
பார்வைத்திறன் குறைபாடுடைய
வருவதற்கும் மற்றும் தனியார்
பயிற்சி நிறுவனங்களில் பணிப்புரியும் மாற்றுத்திறனாளிகள், பள்ளி/கல்லூரிகளுக்கு செல்லும்
மாற்றுத்திறனாளி மாணவர்கள்
மற்றும் வகுப்புகளுக்கு செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக வாயிலாக 2025-2026 ஆம் நிதியாண்டில் 31.03.2026 வரை இலவச பேருந்து பயண சலுகையினை இ-சேவை tnesevai.tn.gov.in, Tamil Nadu state Transport Corporation (TNSTC), TNS-401 Application of Bus pass for differently abled Person/ Intellectual disability / LD / Vision Person என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயண அட்டையினை பெறுவதற்கு தனித்துவ அடையாள அட்டை (UDID),

தற்போது எடுக்கப்பட்ட பாஸ்போட் அளவு உள்ள புகைப்படம்-1 ம் கை கால் பாதிக்கப்பட்டோர், மனவளர்ச்சி குன்றியோர்கள் மற்றும் காது கேளாதோர் (ம) வாய் பேச இயலாதோர், கல்லூரி மற்றும் சிறப்பு பள்ளிகளுக்கு செல்வோர் கல்வி பயிலும் நிறுவனத்தில் கல்வி பயிலும் சான்று (Bonafide), சுயதொழில் செய்வோர் கிராம நிர்வாக அலுவலரிடம் பணிபுரிவதற்கான சான்று, தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோர் நிர்வாகத்திடம் பணிச் சான்று மற்றும் மருத்துவ சிகிச்சைகாக செல்பவர்கள் அரசு மருத்துவரிடம் சான்றுகளுடன் பதிவேற்றம் செய்து பெற்றுக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு திருச்சிராப்பள்ளி கண்டோண்மென்ட் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக பின்புறத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலோ அல்லது 0431- 2412590 என்ற அலுவலக தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *