Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

நவம்பர் 1ம் தேதி முதல் ரயில்களில் முன்பதிவு இன்றி பயணிக்கலாம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் மீண்டும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக  கடந்தாண்டு முதல் தற்போது வரை முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே ஊரடங்கு தளர்வுகளில் பேருந்துகளில் 100% பயணிகள் பயணிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை ஏற்ற தெற்கு ரயில்வே சார்பில் முதற்கட்டமாக 23 ரயில்களில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் முன்பதிவு இன்றி பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளது. அதன்படி ராமேஸ்வரம் – திருச்சி, திருச்சி – ராமேஸ்வரம், சென்னை – ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை – சென்னை, பாலக்காடு டவுன் – திருச்சி, திருச்சி – பாலக்காடு டவுன்,

கண்ணூர் – கோவை, கோவை – கண்ணூர், நாகர்கோவில் – கோட்டயம், கோட்டயம் – நாகர்கோவில், கோவை – மங்களூர், மங்களூர் – கோவை, நாகர்கோவில் – கோவை, கோவை – நாகர்கோவில், திருச்சி – திருவனந்தபுரம், திருவனந்தபுரம் – திருச்சி ஆகிய ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் சேர்க்கப்படவுள்ளது. தீபாவளி பண்டிகை வருவதால் ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் இந்த அறிவிப்பு ரயில் பயணிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *