காந்தி ஜெயந்தி கொண்டாட்டம் - 150 பேருக்கு வேஷ்டி, சேலை, உணவு வழங்கிய திருச்சி அமைப்பினர்!

காந்தி ஜெயந்தி கொண்டாட்டம் - 150 பேருக்கு வேஷ்டி, சேலை, உணவு வழங்கிய திருச்சி அமைப்பினர்!

அண்ணல் காந்தியடிகளின் 152வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் திருச்சியை சேர்ந்த அக்னி சிறகுகள் எனும் அமைப்பினர் சார்பாக 150 பேருக்கு வேஷ்டி, சேலை மற்றும் மதிய உணவினை வழங்கியுள்ளனர்.

திருச்சியில் அக்னி சிறகுகள் என்னும் அமைப்பு 7 ஆண்டுகளாக தொடர்ந்து சமுதாயப் பணிகளை செய்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக போக்குவரத்து நெரிசல், சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வை கல்லூரிகள் பள்ளிகள் போன்ற இடங்களுக்கு சென்று அங்குள்ள மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். தொடர்ந்து திருச்சி மாநகரில் விழாக்காலங்களில் போக்குவரத்தை சரி செய்யவும் இவ்வமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து இந்த இக்கட்டான கொரோனா காலகட்டத்திலும் பலருக்கு நிவாரண பொருட்களை அளித்து நெகிழ்ச்சி ஏற்படுத்தி வருகிறது இந்த அக்னி சிறகுகள் அமைப்பு. திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என 700க்கும் மேற்பட்டோர் இந்த அமைப்பினை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்னி சிறகுகள் தொண்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சுமதி மற்றும் அக்னி சிறகுகள் குழுவினர் சார்பில் வேலூர் மாவட்டம் குடியாத்ததில் சுமார் 150 நபர்களுக்கு வேஷ்டி, சேலை மற்றும் மதிய உணவு வழங்கி காந்தி ஜெயந்தியை கொண்டாடினர்.

Advertisement