79 வது சுதந்திர திருநாளை முன்னிட்டு காந்தி மார்க்கெட் கோட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கோட்டத் தலைவர் சந்து கடை சம்சுதீன் தலைமையில் மூத்த தலைவர்கள் கள்ளத்தெரு குமார் வெள்ளமண்டி பாலசுப்பிரமணியன் மார்க்கெட் மாரியப்பன் ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து சுதந்திரத்துக்காக உயிர் நீத்த தியாகிகள் ஸ்தூபிக்கு நிர்வாகிகளுடன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் எல்ஐசி ஜெயராமன் அண்ணா சிலை விக்டர் மலைக்கோட்டை சொக்கலிங்கம் ஸ்ரீரங்கம் தியாகராஜன் கலை பிரிவு சண்முகம் மகிளிர் காங்கிரஸ் விஜி கிருஷ்ணமூர்த்தி மல்லியம்பத்து தனசேகர் சிங்காரவேல் நிர்மல் குமார் தாகூர் தெரு முருகன் செந்தில்குமார் உறையூர் விஜி மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments