காந்தி மார்க்கெட் வியாபாரிகளின் வேலை நிறுத்த அறிவிப்பு வாபஸ்!

காந்தி மார்க்கெட் வியாபாரிகளின் வேலை நிறுத்த அறிவிப்பு வாபஸ்!

தற்போது உள்ள கொரோனா காலகட்டத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக திருச்சி மாநகராட்சி சில‌ நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக, திருச்சி காந்தி மார்க்கெட் பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் தற்காலிகமாக மாற்றப்பட்டது.

கடந்த சில‌ நாட்களாக திருச்சி மாநகருக்கு அளிக்கப்பட்ட சில தளர்வுகள் காரணமாக அனைத்து கடைகளும் வழக்கம் போல் செயல்பட தொடங்கின.

இந்நிலையில், காய்கறி கடைகளை காந்தி சந்தையில் இயங்க அனுமதியளிக்குமாறு வியாபாரிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். தங்களது‌ கோரிக்கைகள் ஏற்கப்படாத பட்சத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில்‌ ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

வியாபாரிகள் மற்றும் திருச்சி மாநகராட்சி ஆணையர் இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் வியாபாரிகள் அறிவித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

வருகிற ஜூன் மாதம் 30-ம் தேதிக்கு பிறகு மொத்த காற்கறி வியாபாரம் காந்தி சந்தையில் இயங்குவது‌ குறித்து முடிவு எடுக்கப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்