பெரம்பலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அஸ்வின்ஸ் பேக்கரி& ரெஸ்ட்டாரண்ட்,திருச்சி,சென்னை,சேலம்,ஆத்தூர்,துறையூர் கரூர் ,நாமக்கல்,அரியலூர் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வருகிறது.புயல் போன்ற பேரிடர்காலங்களிலும்,கொரோனா நோய்த்தொற்று காலங்களிலும் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை அஸ்வின்ஸ் குழுமம் வழங்கி வருகிறது.அதன் படி கொரோனா முதல்அலை மற்றும் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்ட ஏழைஎளிய மக்களுக்கு அஸ்வின்ஸ் குழுமம் சார்பில் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அஸ்வின்ஸ் குழுமம், முதலமைச்சரின் கொரோனா நிவாரணநிதிக்கு நிதி வழங்கியுள்ளது.அஸ்வின்ஸ் குழுமத்தின் தலைவர் கே.ஆர்.வி.கணேசன் ரூ5 லட்சத்திற்கான காசோலையை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களிடம் வழங்கினார்.மேலும் கொரோனா பரவல் தமிழக அரசின் நடவடிக்கையால் வெகுவாக குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.அப்போது அஸ்வின்ஸ் இயக்குனர் அஸ்வின்,திருச்சி செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC
Comments