திருச்சி மாவட்டம் திருச்சிராப்பள்ளி வனக் கோட்டம், வன உயிரினம் மற்றும் பூங்கா சரகம் எம் ஆர் பாளையம் காப்பு காட்டில் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் உரிமம் இல்லாமலும்,

உரிய அனுமதியின்றி வளர்ப்பு யானைகளின் விதிகளுக்கு புறமாகவும், சட்ட விரோதமாக வளர்க்கப்பட்ட யானைகளை உயர்நீதிமன்ற மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் ஆணைக்கிணங்க பறிமுதல் செய்து வனத்துறை கட்டுப்பாடின் கீழ் செயல்பட்டு வருகிறது.

தற்பொழுது முகாமில் 10 பெண் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மண்டல தலைமை வன பாதுகாவலர் N. சதீஷ் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட வன அலுவலர் S.கிருத்திகா மற்றும் உதவி வன பாதுகாவலர் (Mini Zoo)/ உதவி இயக்குனர் R.சரவணகுமார் வழிகாட்டுதலின்படி வனசரக அலுவலர் வே.ப. சுப்ரமணியம் தலைமையில் வனச்சரக அலுவலர் J.ரவி,

K. சிவசந்திரன் உதவி கால்நடை மருத்துவ அலுவலர், வனவர்கள் மற்றும் வன பணியாளர்களுடன் திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள எம் ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் யானைகளுக்கு உணவு, பழங்கள், சர்க்கரை பொங்கல், கொழுக்கட்டை, சுண்டல், பொரி அவுல், கரும்பு படைக்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 26 Oct, 2025
26 Oct, 2025                           117
117                           
 
 
 
 
 
 
 
 

 08 September, 2024
 08 September, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments