திருச்சி மாநகரத்தில் வருகின்ற 29.08.2025 அன்று நடைபெறும் விநாயகர் சிலை கரைப்பு (விசர்ஜனம்) ஊர்வலத்தை முன்னிட்டு, காவல் ஆணையர் திருமதி ந.காமினி, இ.கா.ப., அவர்கள் மேற்பார்வையில், மொத்தம் 1500 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் நெரிசல் ஏற்படும் பகுதிகளில் கூடுதல் காவல் துறை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் ஊர்வலம் சீராக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும், 29.08.2025 மதியம் 4.00 மணி முதல் 30.08.2025 அதிகாலை 6.00 மணி வரை திருச்சி மாநகரில் வாகனப் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
புறநகர் மற்றும் நகரப் பேருந்துகள் குறிப்பிட்ட மாற்று வழித்தடங்கள் வழியாக இயக்கப்படும்.
சத்திரம் – ஸ்ரீரங்கம் – திருவெறும்பூர் – துவாக்குடி பகுதிகளுக்கான நகரப் பேருந்துகளுக்கு மாற்று பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கோயம்புத்தூர், கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மார்க்கங்களில் செல்லும் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதை வழியாக இயக்கப்படும்.
போக்குவரத்து இடையூறு ஏற்படும் சமயங்களில் தேவையான சிறிய மாற்றங்களும் அவ்வப்போது மேற்கொள்ளப்படும்.
அனைத்து தரப்பினரும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள போக்குவரத்து விதிமுறைகளைக் கடைபிடித்து, காவல்துறைக்கு ஒத்துழைக்கும்படி திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://www.threads.net/@trichy_vision
https://t.me/trichyvision
Comments