திருச்சி மாநகர பிராட்டியூர் பகுதி நுழைவாயிலில் நேற்று( 13/3/22 ) சுமார் 4 அடி அகலம் 6 அடி உயரமுள்ள பிள்ளையார் கோயில் உள்ளே இருந்த இரண்டடி உயரமுள்ள பிள்ளையார் கற்சிலையை மர்ம நபர்கள் இடுப்புவரை உடைத்து எடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து அமர்வு நீதிமன்ற காவல் சரகம் போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

பிராட்டியூர் உடைக்கப்பட்ட வழிவிடு விநாயகர் சிலையை பெயர்த்து எடுக்கப்பட்டு பிராட்டியூர் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள தாமரைக் குளத்தில் போடப்பட்டது. புதிய சிலையை கோயில் அருகில் வைத்து உள்ளனர்.தண்ணீரில் ஊற வைத்து நல்ல நேரம் பார்த்து பிறகு கோயிலின் உள்ளே வைக்க உள்ளதாக கூறியுள்ளனர். பழைய சிலையை உடைத்ததற்கு புகார் ஏதும் தரும் எண்ணத்தில் இல்லை .ஆனால் குற்றவாளியை கண்டுபிடித்து தருமாறு வாய்மொழியாக கூறியுள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO







Comments