திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கரூர் செல்லும் எம் எம் எம் என்ற தனியார் பேருந்தில், நேற்று இரவு 9 மணியளவில் ஓட்டுநர் கணேசன் பயணிகளை கேன்வாஸ் செய்து ஏற்றிக்கொண்டிருந்தார்.
அப்போது கரூர் செல்வதற்கான பயணிகள் குறைவாக இருந்ததால், ஜீயபுரம் செல்லும் பெண்மணியை இருக்கையில் அமரச்சொல்லி டிரைவர் கணேசன் கூறியுள்ளார்.
இப்பேருந்திற்கு அருகில், கரூர் செல்லும் மற்றொரு தனியார் பேருந்து நின்று கொண்டிருந்தபோது, முன்னே செல்லும் பேருந்தில் ஏறுவதற்காக அந்தபெண்மணி பேருந்தில் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தநிலையில், ஒன்று பேருந்தில் ஏறும்மா… இல்லாவிட்டால் இறங்கிச் செல்லுங்கள் என கூறியுள்ளார்.
அப்போது, அந்தப் பெண்மணி தனது கைபேசியில் யாருக்கோ போன் செய்து ஓட்டுனர் குறித்து தெரிவித்ததாகவும், இதனையடுத்து ஜீயபுரம் சென்ற தனியார் பேருந்தை ஐந்து பேர் கொண்ட ரவுடி கும்பல் வழிமறித்து, உருட்டுகட்டைகள் மற்றும் கைகளால்
பேருந்துக்குள் வைத்து துவைத்து விட்டனர் ஆத்திரம் தீராத அவர்கள் மீண்டும் ஓட்டுநரை பேருந்தில் இருந்து இழுத்து கீழே இறக்கி கண்மூடித்தனமாக
சரமாரியாக தாக்கியுள்ளனர்.
தற்போது இந்த சம்பவத்தை பார்த்த பெண்கள் கூச்சலிட்டு அடிக்க வேண்டாம் என்று கூச்சலிட்டனர்.அதையும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த டிரைவர் கணேசன் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியான நிலையில், ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரை தாக்கிய ரவுடி கும்பலை தேடி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments