திருச்சியில் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு அவர்கள் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து திமுக சார்பில் நாளை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து மத்திய மற்றும்
வடக்கு மாவட்ட திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றினார்
இந்த கூட்டத்தில், தமிழகத்தைப் புறக்கணிக்கும் ஒன்றிய அரசு மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜர் எம் எல் ஏ, துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார்,
மாவட்ட மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகி தேவராஜ் உள்ளிட்ட அனைத்து தோழமைக் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments