திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் தொட்டியம் வட்ட அனைத்து வணிகர்கள் சங்க பேரமைப்பு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இணைப்பு சார்பில் 67 ஆம் ஆண்டு துவக்க விழா பாராட்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்ட விழா தொட்டியம் தனியார் அரங்கத்தில் நடைபெற்றது.

67 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தொட்டியம் வட்ட அனைத்து வணிகர்கள் சங்க பேரமைப்பு மாநில துணைத்தலைவர் எஸ்.எஸ்.செல்வராஜ் (எஸ்.எஸ்) சங்க கொடி ஏற்றி விழாவினை துவக்கி வைத்தார். தொட்டியம் வட்ட அனைத்து வணிகர்கள் சங்க பேரமைப்பு மாவட்ட இணை செயலாளர் அரங்கராஜன் தலைமை வகித்தார். தொட்டியம் வட்ட அனைத்து வணிகர்கள் சங்க பேரமைப்பு செயலாளர் மருதை செட்டியார் வரவேற்று பேசினார்.

சங்க உறுப்பினர் சுப்பிரமணியன் இறைவணக்கம் பாடினார். சங்க துணைச் செயலாளர் தனபால் ஆண்டறிக்கை வாசித்தார். முன்னதாக அனைத்து வணிகர்கள் சங்க பேரமைப்பின் திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளராக எஸ் எஸ் கார்த்திக் பதவி ஏற்று கொண்டதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நடந்து முடிந்த தொட்டியம் அருள்மிகு மதுரைகாளியம்மன் கோவில் தேர் திருவிழாவின் பூச்சொரிதல் விழாவை தொட்டிய வட்ட அனைத்து வணிகர்கள் சங்க பேரமைப்பு சிறப்பாக நடத்தியதற்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் மே 5- ஆம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜாவின் தலைமையில் மதுரையில் நடக்கும் 41வது வணிகர் தின விழா மாநில மாநாட்டிற்கு தொட்டியம் வட்ட அனைத்து வணிகர்கள் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்துடன் திரளாக கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. முடிவில் சங்கத் துணைச் செயலாளர் நடராஜன் நன்றி கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           129
129                           
 
 
 
 
 
 
 
 

 28 April, 2024
 28 April, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments