கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை செய்து கொடுக்க மத்திய அரசு சம்மதம் - திருச்சியில் முதல்வர் பரப்புரை

கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை செய்து கொடுக்க மத்திய அரசு சம்மதம் - திருச்சியில் முதல்வர் பரப்புரை

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து,  திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே, தமிழ்நாட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான 
திருச்சி மேற்கு தொகுதி  பத்மநாதன்,  ஸ்ரீரங்கம் கு.ப.கிருஷ்ணன்,  திருச்சி கிழக்கு தொகுதி வெல்லமண்டி நடராஜன்,  திருவெறும்பூர் ப.குமார்,  மணப்பாறை சந்திரசேகர்,  லால்குடியில்  கூட்டணி கட்சியான தமாக வேட்பாளர் தர்மராஜ்,  மண்ணச்சநல்லூர் பரஞ்ஜோதி, முசிறி செல்வராஜ்,  துறையூர் இந்திரா காந்தி ஆகியோரை  மேடையில் அறிமுக செய்துவைத்து  முதல்வர் 
அதிமுக கூட்டணிக்கு வாக்குகளை கேட்டார்.

 அதிமுக ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்று ஒரு பொய்யான குற்றச்சாட்டை மு க ஸ்டாலின் முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

திருச்சி மட்டும் அம்மா மினி கிளினிக் 60 இடங்களில் திறக்கப்பட்டுள்ளது ஏழை எளிய மக்களுக்கு பசுமை வீடுகள் 14 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது எந்த சாதிப் பாகுபாடும் பார்க்காமல் ஏழை மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுத்து அதிமுக அரசு பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கி அரசு அதிமுக அரசு என குறிப்பிட்டார்.

 ஏழை எளிய மாணவர்களின் கல்விக் கனவை மருத்துவ கல்வி கனவை நினைவாக்க வேண்டும் என்பதற்காக 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கியது அதிமுக அரசு. ஒரே ஆண்டில் தமிழகம் முழுவதும் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்தது அதிமுக அரசின் சாதனை இல்லையா?  என கேள்வி எழுப்பினார்.

 கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை செய்து கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தேன் அதற்கு மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. ஒரு விவசாயி முதல்வராக இருப்பதால் விவசாயிகளின் தேவையை புரிந்து கொண்டு அந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம் அண்டை மாநில முதல்வர்களும் அதற்கு அனுமதி தந்துள்ளார்கள். இது போன்ற காரணங்களுக்காகத் தான் மத்திய அரசுடன் இணக்கமான உறவு வைத்துள்ளோம்.

 விவசாயிகள்  பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக வறச்சி நிவாரணம் ,  பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுத்தொகை  9300 பெற்றுத்தந்தது தமிழக அரசு.

பயிர்க்கடன் 12ஆயிரத்து 110 கோடி ரூபாய் தள்ளுபடி இதன் மூலம் 14 இலட்சம் விவசாயிகள் பயன் பெற்று உள்ளார்கள். விவசாயிகளின் கோரிக்கை உடனுக்குடன் தீர்த்து வைக்கக்கூடிய அரசாக அதிமுக அரசு இருந்திருக்கிறது.

 அம்மா இரு சக்கர வாகனம், திருமண உதவித் திட்டம், தாலிக்கு தங்கம் இப்படி பல திட்டங்களை மக்களுக்கு கொடுத்தது அதிமுக அரசு. 

இப்படி பல திட்டங்களை ஏழை எளிய மக்களுக்கும் மாணவர்களுக்கும் விவசாயிகளுக்கும் கொடுத்திருப்பது அதிமுக அரசு.  இந்த அரசு ஒன்றுமே செய்யவில்லை என்று ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்.

  விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது. அதிக அளவு விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமாக நெல் கொள்முதல் செய்தது. நிதி ஒதுக்கி காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்த கொண்டு வந்தது. நதியை மாசுபடுத்தாமல் பாதுகாக்க,  நடந்தாய் வாழி காவேரி திட்டத்துக்கு 10 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். அதற்கு இத்திட்டம் நிறைவேற்றப்படும் என பிரதமர் உத்தரவாதம் கொடுத்துள்ளார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி உள்ளம். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மடிக்கணினி உள்ளிட்டவற்றை  கொடுத்திருக்கிறோம்.

இவை அனைத்தும்  அதிமுக அரசின் சாதனைகள்.

   தமிழக வரலாற்றில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் சட்டமன்றத்திற்கு போன ஒரே முதலமைச்சர் நான். என ஆட்சியில் கோப்புக்கள் எதுவும் தேங்கி கிடக்கவில்லை. அனைத்து கோப்புகள் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி கொள்ளை அடித்துவிட்டு,  நமக்கு எதிராக திமுக வினர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அப்படி கொள்ளையடித்த கூட்டம் தான் திமுக என்றார்.

 சொந்த அண்ணன் முக அழகிரி கட்சியை விட்டு நீக்கி விட்டு துரோகம் செய்த முக.ஸ்டாலின் இந்த நாட்டு மக்களை பாதுகாக்க போகிறாரா? இவற்றைப் புரிந்து கொண்டு அம்மா அரசு அமைக்க இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்
என முதல்வர் பழனிச்சாமி பேசினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW