தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII) சார்பில், சென்னையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வருகின்ற அக்டோபர் 27, 2025 முதல் அக்டோபர் 31, 2025 வரை ஐந்து நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகம், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032.
தங்கம், செம்பு, வெள்ளி, பிளாட்டினம் போன்ற உலோகங்களின் தரம் அறிதல்.
உரைகல் (Touchstone) பயன்படுத்தும் முறை.
கேரட் (Carat) மற்றும் கேரட் மூலம் தங்கம் விலை நிர்ணயிக்கும் முறை (Board Rate).
ஆசிட் பயன்படுத்துதல், எடை அளவு இணைப்பான் குறித்த விவரங்கள்.
தங்கம் (999%, 916%, 85%, 80%, 75%) தரம் அறிதல்.
ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டு முறை.
ரத்தினங்கள் மதிப்பீட்டு முறைகள் (IS), ஹால்மார்க் (Hallmark) தங்க அணிகலன்கள், ஆபரண வகைகள்.
போலியான நகைகளை அடையாளம் காணுதல் மற்றும் அதற்கான வழிமுறைகள்.

பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணி வாய்ப்புகள்.
அவற்றுக்கான விண்ணப்பிக்கும் முறைகள் பற்றிய ஆலோசனைகள்.
அரசு வழங்கும் திட்ட உதவிகள் மற்றும் மானியங்கள் பற்றிய தகவல்.
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் (ஆண் / பெண் / திருநங்கைகள்).
குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி.
, பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
வெளியூர் பங்கேற்பாளர்களுக்கு குறைந்த கட்டண வாடகையில் விடுதி வசதி உள்ளது.
முன்பதிவு அவசியம்.
கூடுதல் விவரங்களுக்கு http://www.editn.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

தொடர்புக்கு: அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை 9360221280, 9840114680 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இது சுயதொழில் தொடங்குவதற்கும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision





Comments