திருச்சியில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு நாள்தோறும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் தங்கத்தை மறைத்து கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா விமான மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒரு ஆண் பயணியை பிடித்து சோதனை செய்ததில், அவர் உள்ளாடையில் மறைத்து
கடத்தி வந்த 16 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 292 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தி வந்த ஆண் பயணியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments