Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பொன்னான வாய்ப்பு உளவுத்துறையில் பணி : 10th பாஸ் போதும் சீக்கிரம் விண்ணப்பிக்கவும் !!

உள்துறை அமைச்சகம் இந்த பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 3 நவம்பர் 2023. எனவே இப்பைக்கு இதற்கு யார் விண்ணப்பிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 13 நவம்பர் 2023 வரை https://mha.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.


இதன் மூலம் 677 பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு நடைபெறுகிறது. 362 செக்யூரிட்டி அசிஸ்டென்ட் மற்றும் 315 எம்டிஎஸ் பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு நடைபெறும். 18 வயது முதல் 25 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க, பொது/ஓபிசி/ஈடபிள்யூஎஸ் விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 500 கட்டணம் செலுத்த வேண்டும்.

எஸ்சி/எஸ்டி மற்றும் எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் விண்ணப்பதாரர்கள் ரூபாய்.50 கட்டணமாக செலுத்த வேண்டும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, யுபிஐ, ரூபே கார்டு, மாஸ்டர்கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் ஆன்லைனிலும் கட்டணத்தைச் செலுத்தலாம். இதற்கு நீங்கள் 10 ஆம் வகுப்பு  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இத்துடன் ஓட்டுநர் உரிமம் பெற்று ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த காலிப்பணியிடங்கள் தொடர்பான ஏதேனும் தகவல் தேவைப்பட்டால், 9986640811 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். இது தவிர, helpdesk.bharti@nic.in என்ற முகவரிக்கு மின்னஞ்சலும் செய்யலாம். UPSCயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு mha.gov.in செல்லவும்.

முகப்புப் பக்கத்தில் நீங்கள் அறிவிப்புகள் இணைப்பைக் கிளிக் செய்க.கிளிக் செய்த பிறகு, IB இல் SA/Exe & MTS(Gen) பதவிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை, கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, படிவ விருப்பம் தோன்றும். அங்கே உங்களின் அனைத்து முக்கியமான தகவல்களையும் உள்ளிட வேண்டும். கடைசியாக, படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். செக்யூரிட்டி அசிஸ்டண்ட் பதவிக்கான சம்பளம் ரூபாய் 21,700 முதல் ரூபாய் 69, 100. MTS பதவிக்கு ரூபாய் 18,000 முதல் ரூபாய் 56,900 வரை சம்பளம் வழங்கப்படும்.
ஆல் தி பெஸ்ட் !.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *