Covid-19 பொது முடுக்கத்திலும் உற்பத்தி வேகத்தை சமன் செய்து சாதனை படைத்த பொன்மலை பணிமனை
உலகையே இயங்காமல் ஒரே இடத்தில் உறைய வைத்த பெரும் தொற்று மனிதர்களின் வாழ்க்கையை மிகவும் பாதித்தது குறிப்பாக உற்பத்தி திறன்களில் பாதிப்பு உலக அளவில் மிகப் பெரியதாகவே இருந்தது.
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதத்தில் முழு பொது முடக்கம் மே மற்றும் ஜூன் மாதங்களில் பகுதி நேர பொது முடக்கம் காரணமாக உற்பத்தியில் மாபெரும் தோல்வி ஏற்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே .
இதை ஈடு செய்யும் வண்ணம் ஜூலை மாதத்திலிருந்து பொன்மலை பணிமனையில் பழுதுபார்க்கும் பணிகள் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் உத்வேகத்துடன் நடந்தேறின உலகத்திலேயே நிலைகுலைய வைத்த பெருந்தொற்றை உதறி தள்ளிவிட்டது இல்லாமல் உற்பத்தி சரிவையும் சமன் செய்ததோடு மட்டுமின்றி இந்த நிதி ஆண்டில் ரயில்வே போர்டு நிர்ணயித்த பல்வேறு இலக்குகளை 10 மாதங்களில் எட்டி பொது முடக்க உற்பத்தி தோய்வை மேற்கொண்டு தென்னிந்தியாவிலேயே கோவிட் 19 சமன் நிலை பெற்ற முதல் ரயில்வே பணிமனையாக சாதனை படைத்துள்ளது.
பிராட் கேஜ் கோச்சுகள் பராமரிப்பு பணியில் ரயில்வே நிர்ணயித்த உற்பத்தி இலக்கு 864ஆகும் இன்னும் ஒரு மாதம் கையில் உள்ள நிலையில் 915 கோச்சுகள் பழுது பார்த்து இவ்வாண்டு இலக்கை விட 51 கோச்சுக்கள் அதிகமாக பராமரிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளன.
மாதம் ஒன்றுக்கு 90 கோச்சுகள் என்ற எதிர்பார்ப்பும் மிஞ்சி இந்த பணிமனை தொடர்ச்சியாக கடந்த 7 மாதங்களாக நூறு கோச்சுகளை பராமரித்து சாதனையை நிகழ்த்தியுள்ளது .
பெரம்பலூரில் இதே போன்று இரண்டு ரயில்வே பணிமனையில் நீட்டிக்கப்பட்ட பொது முடக்கத்தின் காரணமாக ஏற்பட்ட பற்றாக்குறையை ஈடு செய்வதற்கு உற்பத்தி திறனில் இத்தகைய அதிகரிப்பு அத்தியாவசியம் ஆயிற்று .
டீசல் என்ஜின் பராமரிப்பது 29 என்று ரயில்வே வாரியத்தின் இலக்கை தாண்டி இந்த பணிமனை இந்த நிதி ஆண்டில் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே 34 என்ஜின்களை பராமரித்து முடித்துள்ளது மேலும் உயர் குதிரை திறன் கொண்ட எஞ்சின் காண பவர் பேக்குககளை பராமரிப்பதற்கு ரயில்வே வாரியத்தின் இலக்கு 50ஆகும் .பிப்ரவரியில் இறுதிக்குள் இந்த இலக்கும் எட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .
புதிய வேகன் கட்டுமானப் பணியில் ரயில்வே வாரியத்தின் உத்தரவில் பிப்ரவரி இறுதியில் 351 RSP வேகன்கள் உற்பத்தி செய்து கடந்த 50 ஆண்டுகளில் உச்சகட்ட உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது இவற்றில் பிரேக் வேன்கள் மற்றும் நிலக்கரி மற்றும் பிற உலோகங்களை நாடு முழுவதும் கொண்டு செல்வதற்கான வகைகளும் அடங்கும் உலக அளவில் பாதித்துள்ளகொரோனா காலகட்டத்தில் இந்த சாதனை மிகவும் மகத்துவமானது.
பொதுவாக மாதத்திற்கு 20 முதல் 25 ஆர்எஸ் பி வேகன்கள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டது முதல் முறையாக பிப்ரவரி 2021ல் மட்டும் 50 வேகன்கள் தயாரித்து அனுப்பப்பட்டது இது சாதாரண உற்பத்தி விகிதத்தை விட இரு மடங்கு ஆகும் இது இந்த பணிமனையில் மேற்கொள்ளப்பட்ட பாராட்டத்தக்க முயற்சி ஆகும் .
இந்த ஆண்டு முதன் முதலில் எல் எச் பி கார் மற்றும் முதல் முதல்டெமு டீசல் பவர் கார் ஆகியவை பராமரிப்பு முடித்து அனுப்பப்பட்டன இந்த நிதியாண்டில் 70 பழைய Icf கோட்சிகளை மாற்றி வடிவமைக்கப்பட்டகூடஸ் ஆக புரணமைத்து தெற்கு ரயில்வேலேயே அதிகப்படியாக கொடுத்த பெருமை இந்த பணிமனைக்கு சேரும்.
இது இந்திய ரயில்வேக்கு வருவாய் அதிகரிப்பதற்கான ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பணிமனை யுனெஸ்கோ புகழ் நீலகிரி மலை ரயில்வே எம் ஜி நீராவி இன்ஜின்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதற்காக பெரும்பாலான முக்கிய பாகங்கள் தருவிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன இந்த நீராவி எஞ்சின் ஏப்ரல் 2021 பணி நிறைவடைந்து அனுப்பி வைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.பொன்மலை பணிமனையின் ஊழியர்கள் மேற்பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகள் அயராத உழைப்பால் பொது ஊடகத்தில் காரணமாக ஏற்பட்ட உற்பத்தி குறைவை ஈடுகட்டியதோடில்லாமல் இந்த நிதி ஆண்டையும் லாபகரமானதாக மாற்ற முடிந்தது குறிப்பிடத்தக்கது பிப்ரவரி 14 ஆம் தேதி மாண்புமிகு பாரத பிரதமர் காணொளி வாயிலாக கொடியசைத்து அனுப்பப்பட்ட தொடர்களில் இந்த பணிமனையில் புதிதாக தயாரிக்கப்பட்ட வேகன்கள் தஞ்சாவூரிலும் சென்னையில் பயன்படுத்தப்பட்டன என்பது இந்த பணிமனையில் தரம் மற்றும் பணித்தறனுக்கு சான்றாகும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH