திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்கள் உத்தரவின் பேரில் இன்று 16.5.2025 திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் காவல் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்
திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனிப்படையினர் ரமேஷ் குமார் ராமர் பாண்டி என்பவரை கைது செய்து திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் உள்ள குடோனில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரூபாய் 8 லட்சம் மதிப்புள்ள ஹான்ஸ் புகையிலை குட்கா குட்கா பாக்கு என மொத்தம் 710 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய குட்கா பொருட்கள் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய கார் ஐபோன் மற்றும் பணம் 8,00,000 ஆகியவற்றை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நேற்று சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குபேர நகர் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படையினர் மேற்கொண்டதன் பேரில் சண்முகா நகரில் வசிக்கும் ஆனந்தராம் என்பவர் தனக்கு சொந்தமாக குடோனில் அரசா தடை செய்யப்பட்ட சுமார் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்புள்ள புகையிலை பாக்கு குட்கா பாக்கு மொத்தம் 318 கிலோ குட்கா போதை பொருட்கள் பறிமுதல் செய்து
சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் இதுவரை 1028 கிலோகிராம் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்து காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.மேற்கண்ட சிறப்பான பணியை மேற்கண்ட காவல் அதிகாரி மற்றும் ஆளிநர்களையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் வெகுவாக பாராட்டினார்.
இது போன்ற அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் மதி மயக்கும் பிற போதை வஸ்துக்களை விற்பனை செய்யும் செயல்கள் யாரேனும் ஈடுபடுவதாக தெரிந்தால் அவசர உதவி எண் 8939146100க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுமை வரும் ரகசியம் காக்கப்படும்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments