திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் அம்பேத்கார் நகரில் ஏழு மாத சினை பசுமாடு மூன்று நாட்களாக உணவு உண்ணாமல் படுத்த படுக்கையாக இருக்கிறது.அதே கிராமத்தில் உள்ள அரசு மருத்துவரை அணுகி வைத்தியம் பார்க்கச் சொன்னால் அவர் தனியார் மாட்டு வைத்தியரின் நம்பரை கொடுத்து அவரை வைத்து வைத்தியம் பார்க்க சொல்கிறார்.
அந்த தனியார் மருத்துவர் ஒரு நாளைக்கு பின்னர் வர மறுத்து விட்டார். நீங்கள் அரசு வைத்தியரை வைத்து வைத்தியம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்.
7 மாத கர்ப்பிணியான இந்த பசுமாடு உணவு உண்ணாமல் படுத்த படுக்கையாக இருக்கிறது, இப்படியே தொடர்ந்தால் ஓரிரு நாட்களில் மாடு மரணம் அடைந்து விடும், தாயையும் சேயும் காப்பாற்றும் படி மாட்டின் உரிமையாளர் அரசு மருத்துவரிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அவரோ செவி சாய்ப்பதாக தெரியவில்லை.
அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துத் தாயையும் சேயும் காப்பாற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments