ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் உருவப்படத்திற்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அஞ்சலி  செலுத்திய  ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய போது…. இந்திய ராணுவத்தில் பிபின் ராவத்தின் பங்களிப்பு சிறப்பானதாக இருந்தது. தீர்க்கமான முடிவெடுப்பதில் வல்லவராக திகழ்ந்தார். இராணுவத்தில் அவரின் வியூகங்களால் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அவரின் வியூகத்தினால் சீன ராணுவத்தை பின்வாங்க செய்தார்.
இந்தியா ஒரு மிகச்சிறந்த இராணுவ வீரரை இழந்து விட்டது.

 அவருடைய ஆன்மாவும் அவருடன் உயிரிழந்த மற்ற இராணுவ வீரர்களின் ஆன்மாவும் அமைதி பெற பிராத்தனை செய்கிறோம் என்றார். மாவட்ட ஆட்சியர் சிவராசு மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார். முன்னதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி அஞ்சலி செலுத்தினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

 31 Oct, 2025
31 Oct, 2025                           84
84                           
 
 09 December, 2021
 09 December, 2021

Comments