சென்னையில் இருந்து நேற்று மாலை அரசு விரைவு பேருந்து ஓட்டுநர் சௌந்தர் (39), நடத்துனர் சின்னதம்பி மற்றும் 30 பயணிகளுடன் நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே வெங்கட் நாயக்கன்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது பேருந்தின் முன் பக்க டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டைகளை உடைத்துக் கொண்டு மறுபக்க சாலைக்கு சென்று சர்வீஸ் சாலையை கடந்துஅருகில் இருந்த பூசாரி குளத்தில் பேருந்து கவிழ்ந்தது.
குளத்தில் தண்ணீர் இல்லாததால் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினர். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

https://www.threads.net/@trichy_vision
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments