திருச்சி மாநகராட்சி வீட்டு வாசலில் திடக் கழிவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 300மினி லாரிகள் மற்றும் லாரிகளில் ஜிபிஎஸ் அடிப்படையிலான கண்காணிப்பு சாதனங்கள் இணைக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. நடவடிக்கையானது வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கும் செயல்முறையை ஒழுங்குபடுத்துவது கழிவுகளை சாலைகள் மற்றும் காலி இடங்களில் கொட்டுவதற்கு லாரிகள் காரணம் என்று குடியிருப்பாளர்கள் குற்றம்சாட்டுவதை குறைக்கும்.
5 மண்டலங்களிலும் தலா 50 முதல் 70 வாகனங்கள் வீடுகள் மற்றும் வணிக இடங்களிலிருந்து கழிவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு வாகனமும் கழிவுகளை சேகரிக்க நியமிக்கப்பட்ட பாதை வரைபடம் மற்றும் நேர அட்டவணையை வைத்திருந்தாலும், வாகனங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தை பராமரிக்கவில்லை என்றும் அவற்றின் வருகை கவனிக்கப்படாமல் போகிறது என்று குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர். இதனால் குடியிருப்பு வாசிகள் காலியிடங்களில் கழிவுகளை கொட்டுவதாக தெரிவித்தனர்.
இந்தூர் திடக் கழிவு சேகரிப்பு மாதிரியை பின்பற்றி ஜிபிஎஸ் நடவடிக்கையை மாநகராட்சி துவங்கி உள்ளது. மாநகராட்சி தனது சொந்த ஊழியர்கள் மூலம் இந்த முறையை செயல்படுத்தப்படும் மினி டிரக்குகளில் நிகழ்நேர இருப்பிடத்தை பெறுவோம் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் வாகனங்களின் செயல்திறனை கண்காணிக்கும் தவறவிட்டால் ஐசிசிசியின் ஆபரேட்டர்கள் குறைபாடுகளை தெரிவிப்பார்கள் என்று மூத்த மாநகராட்சி அதிகாரி கூறினார்.
ஒவ்வொருவருக்கும் எத்தனை தெருக்கள் மற்றும் வீடுகள் என்பது ஒதுக்கப்படும் மைக்ரோம்காம்போஸ்ட் மையத்திற்கு திரும்புவதற்கான நேரங்களை கொண்டிருக்கும் நிர்ணயிக்கப்பட்ட வழியில் இருந்து ஏதேனும் விலகல்கள் ஐசிசிசி ஆபரேட்டர்கள் பதிவு செய்யப்படும் திடக்கழிவு மேலாண்மை நடைமுறைகள் மேம்படுத்த ஐசிசிசி உள்கட்டமைப்பு முழுமையாக பயன்படுத்தும் கவரேஜ் நெறிப்படுத்தப்பட்ட உடன் குடியிருப்பில் குப்பைகளை அள்ளுவது குறித்து குறைகளை கூற முடியாது என்று அந்த அதிகாரி மேலும் கூறினார். முதல்கட்டமாக முன்னோடித் திட்டமாக வார்டு-1 ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும் இதை அடுத்த இரண்டு மாதங்களில் மற்ற வார்டுகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் ஜிபிஎஸ் அமைப்பிலிருந்து விளக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments