தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டமைப்பின் மாநில தலைவர் செல்லையா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில்… தேர்தல் அறிக்கையின் படி பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த காலங்களை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த போராட்டத்தில் வழங்கப்பட்ட இடமாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
ஜாக்டோ-ஜியோ தலைவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கி புதிய அரசாணை வெளியிட வேண்டும். 60 வயது அல்லது முப்பது ஆண்டுகள் பணிக்காலம் என்பதை நிர்ணயம் செய்து அரசு பள்ளி ஆசிரியர்களின் நலனில் தமிழக அரசு அக்கறை காட்ட வேண்டும். மாணவர்கள் எதிர்கால நலன் கருதி போதிய பாதுகாப்பு வசதிகள் படிப்படியாக பள்ளிகளை திறக்க வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr







Comments