தாத்தாவுக்கு ஓட்டு கேட்ட பேத்தியும் - 100% சதவீதம் வாக்களிக்க பரப்புரை செய்யும் சிறுமியும் வைரல்

தாத்தாவுக்கு ஓட்டு கேட்ட பேத்தியும் - 100% சதவீதம் வாக்களிக்க பரப்புரை செய்யும் சிறுமியும் வைரல்

திருச்சி கிழக்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் நடராஜனின் பேத்தி உத்ராவுக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல், வேடமிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர்.

 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் மூத்த தலைவர்களும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
 அவர்களுக்கு ஆதரவாக மகன், மகள் போன்றவர்கள் களத்தில் இறங்கி தீவிரமாக ஓட்டு சேகரித்து வருகின்றனர்.

திருச்சி கிழக்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக அமைச்சர் நடராஜன் போட்டியிடுகிறார். தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நடராஜனின் பேத்தி உத்ராவை பிரச்சார வேனில் ஏற்றியுள்ளார். திருச்சி கிழக்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் நடராஜனின் மகன் ஜவகரின் மகள் உத்ரா. 

         சிறுமி உத்ரா பரப்புரை செய்த படம்
4ம் வகுப்பு படித்து வரும் 10 வயது சிறுமிக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல் வேடமிட்டு, திறந்த வேனில் மைக்கை பிடித்து பிரச்சாரம் செய்ய வைத்துள்ளனர்.
மழலை பேச்சு மாறாத சிறுமிக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், ஜெ.ஜெயலலிதாவாகிய நான்.
 மக்களால் நான்; மக்களுக்காக நான், நீங்கள் செய்வீர்களா? என்பன பிரபலமான வாசகங்களை , பேசுவதற்கு பயிற்சியளித்து, பிரச்சாரம் செய்ய வைத்துள்ளனர்.

 தாத்தா நடராஜனுக்கு ஆதரவாக, பேத்தி ஓட்டு சேகரித்த சம்பவம் அரங்கேறியது.
கலை நிகழ்ச்சிகளில், சிறார்கள், தலைவர்கள் போல் வேடமணிவதோ, அவர்களை போல் பேசுவதோ தனித் திறமையாக எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், 10 வயது சிறுமிக்கு பயிற்சி கொடுத்து, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளது ஒரு புறம்.


இன்னொரு பக்கம் வேறுவிதமான விழிப்புணர்வை திருச்சியை சேர்ந்த சிறுமி செய்துவருகிறார் . திருச்சி குமரன் நகரை சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி சுவர்னிகா  பெண்களுக்கு எப்படி ஓட்டுரிமை வந்தது? பெண்களுக்கு ஓட்டுரிமை மறுக்கப்பட்டது மீண்டும் வயதுவரம்பு வந்தது உள்பட அனைத்து தகவல்களையும் பேசி விழிப்புணர்வை பரப்புரையை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். 

                    சிறுமி சுவர்னிகா

ஒருபுறம் வேட்பாளர்கள் தனது மகள், மகன்,பேத்தி உள்ளிட்டோரை தேர்தல் பரப்புரையில் ஈடுபட வைத்து வருகின்றனர்.ஆனால் இச்சிறுமியோ 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். பெண்கள் அதிக அளவில் வாக்களிக்கிறார்கள் அதனை வலியுறுத்தி இந்த காணொளியை வெளியிட்டு உள்ளார். 


எங்கள் வீட்டில்
அனைவரும் வாக்களிப்பார்கள். நீங்களும் வாக்களியுங்கள் என்று அனைவரையும் கேட்டுக்கொண்டு உள்ள காணொளி வைரலாகி வருகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81