திருச்சி வினோத் கண் மருத்துவமனை மற்றும் நகர நிர்வாகத்துறை இணைந்து நாளை (06.01.2023) மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. இம்முகாம் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆணைக்கிணங்க நடத்தப்படுகிறது.


நாளை (06.01.2023) காலை 10:00 மணி முதல் மதியம் 01:00 மணி வரை திருச்சி உறையூர் திருத்தாங்கனி ரோடு கைத்தறி கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. இம்முகாமினை மாநகராட்சி 10வது வார்டு மாமன்ற உறுப்பினர் முத்துக்குமார் துவக்கி வைக்கிறார்.

இதில் கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் அளிக்கப்பட உள்ளன. பொதுமக்கள் இந்த இலவச கண் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments