நீதிமன்ற நூற்றாண்டை நோக்கி இந்த ஆண்டு காலை 10:00 மணிக்கு தொடங்கி மாலை 5:00 மணி வரை மிகவும் சிறப்பாக விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கயிறு இழுத்தல்,தண்ணீர் நிரப்புதல், பலூன் உடைத்தல், பானை உடைத்தல், கோலப்போட்டி, மியூசிக்கல் சேர், சிலம்பம் என்று ஏகப்பட்ட போட்டிகள் நடைபெற்றன வெற்றி பெற்றோருக்கு துறையூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நர்மதா ராணி அவர்கள் சான்றிதழும் பரிசுகளையும் வழங்கினார்.
விழாவில் பெட்டிக்கடை, டீக்கடை, பாப்கான் கடை என உண்மையாகவே செயல்பட வைத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
விழாவிற்கு சங்கத் தலைவர் கார்த்திகேயன், துணைத்தலைவர் எஸ் பி பாஸ்கரன், செயலாளர் முகமது ரஃபீக், துணைச் செயலாளர் சுடலாத்தி சிவகுமார், பொருளாளர் நரேஷ் குமார், மற்றும் இந்த விழாவிற்கு மூத்த GP சந்திரமோகன் வழக்கறிஞர்கள் சுரேஷ்குமார் AS மனோகர் SRS செந்தில்குமார் முத்துக்குமார் ஜெயராஜ் உத்திராபதி குலாம் முகமது பாட்சா தனசேகர் நிர்மல் கோகிலா ரம்யா சபாபதி அறிவழகன்,
கோகுல் ராஜா மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், காவலர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments