திருச்சி கே. ராமகிருஷ்ணா கல்லூரியில் நடைபெற்ற பசுமை திருவிழா
திருச்சி கே. ராமகிருஷ்ணன் கல்லூரியில் வேதியியல் துறை சுற்றுச்சூழலியல் குழு மற்றும் எக்ஸ்னோரா அமைப்பின் ஆண்டு நிறைவு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த அமைப்பின் உறுப்பினர்கள் மட்டும் விழாவில் பங்கு கொண்டனர்.
Advertisement
இன்ஸ்டிடியூட் ஆஃப் கிரீன் இன்ஜினியர்ஸ் என்ற ஆர்கனைசேஷன் நடத்திய Sustainable Development 13 காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிந்து கொள்ள தொடர்ந்து தொண்ணூற்றி ஒன்பது நாட்கள் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளின் 99 நாள் நிகழ்ச்சி தொகுப்பு காணொளி வடிவில் திரையிடப்பட்டது.கல்லூரியின் முதல்வர் சீனிவாசன் தேவராஜ் அவர்கள் தலைமை உரை ஆற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர் மோகன் அவர்கள் சிறப்புரை ஆற்றி தேர்தல் மற்றும் ஓட்டுப்பதிவு குறித்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எடுத்துரைத்தார்.
100 சதவீத வாக்குபதிவுக்காண உறுதிமொழியையும் இவ்விழாவில் மாணவர்களும், பெற்றோர்களும் ஆசிரியர்களும் எடுத்துக் கொண்டனர் .இவ்விழாவின் முக்கிய நோக்கமான பசுமைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
99 நாள் போட்டிகள் என்ற சாதனையை நிகழ்த்திய வேதியல் துறை சுற்றுச்சூழலியல் குழு மற்றும் எக்ஸ்னோரா அமைப்பினை பாராட்டி கல்லூரியின் முதல்வரும் சிறப்பு விருந்தினரும் வேதியல் துறையின் அனைத்து ஆசிரியர்களுக்கும் சிறப்பு சான்றிதழை வழங்கினார்.
ராமகிருஷ்ணா கல்லூரியில் வேதியியல் துறைக்கும் குன்னூர் பிராவிடன்ஸ் கல்லூரியின்(MOU) வேதியல் துறைக்கும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் எக்ஸ்நோர இன்டர்நேஷனல் அமைப்போடு மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது எவ்வித கல்லூரியும் நிகழ்த்தாத இணையவழி தொழில்நுட்பத்தின் உதவியோடு கொரானா காலத்தில் 680 மரக்கன்றுகள், 4 வினாடி வினா 7 இணையவழி கருத்தரங்குகள், மொட்டை மாடி தோட்டம், இயற்கை உரம், இயற்கை வேளாண்மை, தென்னைநார் திட்டம், 21 மற்ற போட்டிகள் என மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் என மொத்தம் 150 க்கும் மேற்பட்ட போட்டிகளையும் 300க்கும் மேற்பட்ட சான்றிதழ்களையும் வழங்கி மிகப்பெரிய சாதனையை செய்த வேதியியல் துறை சுற்றுச்சூழலியல் குழு மற்றும் எக்ஸ்னோரா அமைப்பின் மாணவர்களையும் அவர்களை வழி நடத்த ஆசிரியர்களையும் அனைவரும் பாராட்டினர் .
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81