Wednesday, September 24, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் பசுமை தமிழ்நாடு தினம்: மாவட்ட ஆட்சியர் நாவல் மரக்கன்று நடவு விழா தொடக்கம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஜெ.ஜெ.பொறியியல் கல்லூரி வளாகத்தில் வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்க தினம் 2025 முன்னிட்டு நாவல் மரத்தினை கொண்டாடும் வகையில் நாவல் மரக்கன்றுகள் நடும் நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் இன்று (24.09.2025) தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பசுமை தமிழ்நாடு இயக்கம் 24.09.2022 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 2030, 2031 ஆம் ஆண்டிற்குள் மாநில புவியியல் பரப்பளவில் காடு மற்றும் மரங்களின் பரப்பளவை 23.8 சதவிகிதத்திலிருந்து 33 சதவிகிதமாக அதிகரிக்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்டது. இந்த இயக்கமானது 10 ஆண்டுகளில் சுமார் 13,500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 265 கோடி பூர்வீக மரக்கன்றுகளை நடுவது நோக்கமாக கொண்டுள்ளது. இந்த நோக்கத்தினை நிறைவேற்றும் விதமாக ஆண்டுதோறும் செப்டம்பர் 24ஆம் தேதி பசுமை தமிழ்நாடு இயக்க தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதல், உற்பத்தி திறனை மேம்படுத்துதல், சதுப்புநில பரப்பை விரிவுபடுத்துதல், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் NHAI மூலம் அவென்பூ நடவு செய்தல், விவசாய நிலங்களில் மரங்களை நடுவதை ஊக்குவித்தல், நகர்புற மற்றும் புறநகர் நிலப்பரப்புகள், கல்வி நிறுவனங்கள், கோவில் மைதானங்கள், தொழில்துறை பகுதிகள், குளக்கரை, படுகை பகுதிகள் மற்றும் நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் உள்ளுர் சமூகங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இந்த இயக்கம் கவனம் செலுத்துகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்க திட்டத்தை செயல்படுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் தலைமையில் மாவட்ட பசுமை குழு உருவாக்கப்பட்டு வனத்துறை, ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை துறை, தோட்டக் கலை துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலமாக மரக்கன்றுகளை நடவு செய்து திருச்சிராப்பள்ளி மாவட்ட வனப்பரப்பை அதிகரிக்க திட்டம் தீட்டி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ் 2022-2023 முதல் 2024-2025 வரை 56,06,969 மரக் கன்றுகள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடவு செய்யபட்டுள்ளது. 2025-2026 ஆம் நிதியாண்டில் 26,33,000 இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 24.09.2025 வரை 3,68,114 மரக்கன்றுகள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் கீழ் 2025-2026 ஆம் ஆண்டிற்கான முதன்மை இனமாக நாவல் மரம் (Syzygium cumini) தேர்வு செய்யப்பட்டு இன்று 24.09.2025 பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி ஜெ.ஜெ.கல்லூரியில் நடைபெற்ற விழா நிகழ்வில் திருச்சிராப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளான முசிறி, துறையூர், துவரங்குறிச்சி, மணப்பாறை ஆகிய பகுதிகளில் சுமார் 1500 நாவல் மரக் கன்றுகளும், 2100 பல இன மரங்களும் நடவு செய்யப்படும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்து மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வன அலுவலர்கள் எஸ்.கிருத்திகா, அவர்கள், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் சீனிவாசன், வனச்சரக அலுவலர் திருச்சி வி.பி.சுப்ரமணியம் உள்ளிட்ட வனத்துறை அலுவலர்கள், கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *