பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும் மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும் உணவுப்பொருள் வளங்கல் தொடர்பான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை நடத்த உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி திருச்சி மாவட்டத்தில் நாளை (08.10.2022) காலை 10 மணி முதல் பிற்பகல் 1.00மணி வரை கீழ்கண்ட வட்டங்களில் அதன் எதிரே குறிப்பிட்டுள்ள நியாய விலை அங்காடிகளில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் தனி வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல்  அலுவலர்களால் நடத்தப்பட உள்ளது.

இதற்கு ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு கண்காணிப்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் பொது விநியோகத் திட்டம் தொடர்பான கோரிக்கைகளைன குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை கோருதல், மற்றும் இதர கோரிக்கைகளை தெரிவித்து பயனடையலாம் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments