பகுதி சபா கூட்டம் 29.10.2025 அன்று திருச்சி மாநகராட்சி 65 வார்டிலும் மக்கள் குறைகளை தமிழக அரசு உத்தரவின் அடிப்படையில் மாநகராட்சி கவுன்சிலர் தலைமையில் மனு பெறுதல் :
காளிமுத்து, செழியன், பார்த்தசாரதி, ஹரிதாஸ் தலைமையில் வயலூர் சாலையில் உள்ள ஜானகி அம்மாள் காலனி, எல் ஐ சி காலனி ஆனந்தம் நகர் குடியிருப்பு வாசிகள் 30 பேரிடம் பொது மக்களிடம் கையெழுத்து பெற்று மக்களின் அடிப்படை பிரச்சனைகள் சம்பந்தமாக கோரிக்கை மனு இன்று நடந்த மாநகராட்சி 25 ஆவது வார்டு விஜயலட்சுமி கவுன்சிலர் தலைமையில் நடந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் கொடுக்கப்பட்டது.
மனுவைப் பெற்றுக் கொண்ட கவுன்சிலர் மக்கள் பிரச்சனை உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் அந்த வகையில் பொதுமக்களின் குறைகளை மாநகராட்சி நிர்வாகம் தீர்க்கும் என்ற வகையில் பேசினார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments