திருச்சி பஞ்சப்பூரில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ரூபாய் 430 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து பணிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் ரூபாய் 17.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுவதற்கான பூமி பூஜையை இன்று காலை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி, துணை மேயர் அன்பழகன், மாநகராட்சி பொறியாளர் சிவபாதம், மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ், காஜாமலை விஜி, அரியமங்கலம் சுரேஷ், மண்டல தலைவர்கள் விஜயலட்சுமி, துர்காதேவி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments