Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

இலங்கை அகதிகள் முகாமில் குழந்தைகளுக்கான காவலர் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம்

திருச்சி மாநகர காவல் ஆணையர் கடந்த ஜூலை 1-ஆம் தேதியன்று கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை பார்வையிட்டு முகாம் வாசிகள் குறைகளை கேட்டறிந்ததோடு அதனை நிவர்த்தி செய்யும் வகையில் பல நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். கடந்த 19ஆம் தேதியன்று கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாம் மற்றும் சிறப்பு முகாம்வாசிககளுக்காக சிறப்பு மருத்துவ முகாம் திருச்சி மாநகர காவல் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக இளையோர் செஞ்சிலுவை சங்கம் SRM மருத்துவக்கல்லூரிகள் இணைந்து நடத்தியது.

இம்மருத்துவ முகாமில் பொதுநலம், எலும்பியல், தோல், இதயம், வயிறு, காது, மூக்கு மற்றும் தொண்டை பிரிவுகளை சேர்ந்த மருத்துவர்களால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்துகளும் வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக திருச்சி மாநகர காவல்துறை சார்பில் கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகளுக்காக காவலர் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றத்தினை திருச்சி மாநகர துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சக்திவேல் தலைமை ஏற்று துவக்கி வைத்துள்ளார்.

மேலும் இவ்விழாவில் ஜமால் முகமது கல்லூரி நிர்வாக இயக்குனர் அப்துல் காதர் நிஹால், நயசடவுசரளவ நிர்வாக இயக்குனர் முனைவர் ராமச்சந்திரன்,
 கன்டோன்மென்ட் சரக காவல் உதவி ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு), காவல் ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் 150 சிறுவர் சிறுமியர் மற்றும் சிறுமியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இம்மன்றத்தில் குழந்தைகளுக்கான புத்தகங்கள், பல்வேறு விளையாட்டு பொருட்கள் ஆகியவை பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது

அரசின் நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்ற இவ்விழாவில் கலந்து கொண்ட  கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த காவலர் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றமானது தங்களது குழந்தைகளுக்கு நல்வழி காட்டும் வகையிலும் சிறந்த பொழுது போக்கு அம்சங்கள் உள்ளதாக அமைக்கப்பட்டுள்ளதாகவும், இம்மன்றம் அமைவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்த திருச்சி மாநகர காவல் துறைக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *