திருச்சிராப்பள்ளி மாவட்டம். துறையூர் தாலுக்கா. ஆலத்துடையான்பட்டி கிராமத்தில் வசித்துவரும் சுரேஷ் 35/25 த.பெ நடராஜன் என்பவர் தனது மனைவி மாதவி வீடான தொட்டியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முள்ளிப்பாடி கிராமத்தில் வசித்து வந்த நிலையில், முன் விரோதம் காரணமாக கடந்த 02.09.2025-ம் தேதி இரவு 0700 மணியளவில் முள்ளிப்பாடி பேருந்து நிறுத்தம் அருகில் இவ்வழக்கின் எதிரிகளான 1.கல்பேஷ், 35/25 S/o உத்தரகுமார். ஆலத்துடையான்பட்டி, துறையூர் (Tk), 2. அஸ்வின்குமார் படையப்பா, 26/25, S/0 முருகேசன், ஆலத்துடையான்பட்டி, துறையூர் (Tk), மேற்படி சுரேஷை ஆகியோரால் அருவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக, மேற்படி சஞ்சீவிநாதன் கொடுத்த புகாரின் பேரில் தொட்டியம் கா.நி., குற்ற எண். 384/25 u/s 103(1), 351(3), 238(a) BNS -ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி எதிரிகள் மற்றும் இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற எதிரிகளான 3. கவியரசன், 32/25 S/o உத்திரகுமார், 4/180, மாரியம்மன் கோவில் தெரு, ஆலத்துடையான்பட்டி, துறையூர் (Tk), மருதுபாண்டி, 19/25 S/o மணி, 4/249,அர்ஜுன தெரு.

அழகரை மேற்கு, தொட்டியம் (Tk) 5. 5. பிரவீன் @ முகமது 31/25 S/o உத்திரகுமார், 4/180, மாரியம்மன் கோவில் தெரு, ஆலத்துடையான்பட்டி, துறையூர் (Tk) 6. பரமேஸ்வரன், 26/25, S/o முருகேசன், முள்ளிப்பாடி காலனி, தொட்டியம் (Tk) ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மேற்படி சிறையில் இருந்து வரும் எதிரிகளான 1.கல்பேஷ், 35/25 S/o உத்தரகுமார், ஆலத்துடையான்பட்டி, துறையூர் (Tk), 2. அஸ்வின்குமார் @ படையப்பா, 26/25, S/o முருகேசன். ஆலத்துடையான்பட்டி, துறையூர் (Tk), 3. கவியரசன், 32/25 S/o உத்திரகுமார். 4/180, மாரியம்மன் கோவில் தெரு, ஆலத்துடையான்பட்டி, துறையூர் (Tk) ஆகியோர் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இன்று 25.10.2025-ம் தேதி சிறையில் உள்ள எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் தற்போதுவரை மொத்தம் 91 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments