Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ரூ.4 இலட்சம் மதிப்புள்ள ஹான்ஸ் மற்றும் விமல் பறிமுதல் – 2 பேர் கைது

நேற்று (02.07.2024-ந் தேதி அரியமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட SIT சந்திப்பின் அருகே அரியமங்கலம் காவல்நிலைய இரவு ரோந்து அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் வாகன சோதனை செய்த கொண்டிருந்தபோது, இரவு 01:30 மணியளவில் அவ்வழியே சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த TN 32 AJ 9340 என்ற எண்ணுள்ள Maruthi Ertiga காரை சோதனை செய்தனர்.

அப்போது, அதில் சுமார் 27 மூட்டைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களான ஹான்ஸ் – 150 கிலோ, விமல் -90 கிலோ ஆக மொத்தம் 240 கிலோ (மதிப்பு ரூ.4,00,000/-) குட்கா புகையிலை பொருள்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. உடனடியாக மேற்படி குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, குட்கா புகையிலை பொருள்களை கடத்தி வந்த

திருச்சி மாவட்டம் தொட்டியத்தை சேர்ந்த செல்வகுமார் (26), த.பெ.வேலுமணி மற்றும் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுகோட்டையை சேர்ந்த ஸ்ரீநாத் (39), த.பெ.பழனிவேல் ஆகியோரை கைது செய்தும், அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் மற்றும் குட்கா புகையிலை பொருள்களை கடத்தலுக்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்படி நபர்கள் மீது Cr.No.251/2024 u/s 275,123 BNS r/w 24(i) COTPA Act – காவலுக்கு அனுப்பப்பட்டது. மேற்கண்ட புகையிலை பொருள்களை கடத்திய நபர்களை வாகன சோதனையில் பிடித்த அரியமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜார்ஜ் ஜேக்கப், மு.நி.காகாளிமுத்து, ஊர்காவல்படையை சேர்ந்த தினேஷ் மற்றும் ராஜேஷ் ஆகியோர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.

மேலும் இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதை பொருட்களான கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருள்களை கடத்தி விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் தெடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *